இலங்கை தேயிலைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலைக்கு உலக சந்தையில் இந்த நாட்களில் அதிக கேள்வி காணப்படுவதாக இலங்கை தேயிலைச் சபை கூறியுள்ளது.
அதன்படி காணப்படுகின்ற கேள்விக்கமைய உலக சந்தையில் தேயிலைக்கான விலை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் தேயிலை 470 ரூபாவாக இருந்ததுடன், கேள்வி அதிகரித்துள்ளமையையடுத்து ஒரு கிலோகிராம் தேயிலை 600 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் மத்திய மலைநாட்டில் நிலவுகின்ற காலநிலைய காரணமாக தேயிலையின் தரம் அதிகரித்துள்ளமை தேயிலை விலை அதிகரிப்பிற்கான காரணம் என்று இலங்கை தேயிலைச் சபை கூறியுள்ளது. எவ்வாறாயினும் தேயிலை தொழில்துறையில் காணப்படுகின்ற ஊழியர் பற்றாக்குறை காரணமாக கேள்விக்கேற்றவாறு தேயிலையை வழங்குவதற்கு தேயிலை நிறுவனங்களுக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலைச் சபை கூறியுள்ளது.
Related posts:
மாணவர்கள் பண்பானவர்களாக மிளிரவேண்டும்- யாழ். ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்
மீண்டும் காசநோய் அபாயம்! மக்களே எச்சரிக்கை!!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் 7500 கோடி ரூபாவாக உயரும் -அமைச்சர் சந்திம வீரக்கொடி !
|
|