இலங்கை தேசிய சினிமா துறைக்கு 70 வருடங்கள்!

Saturday, January 21st, 2017

இலங்கையில்  தேசிய சினிமா துறைக்கு இன்றுடன் 70 வருடங்கள் பூர்த்தியாகின்றன.  கடவுனு பொரொந்துவ என்ற திரைப்படம் 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த நாட்டின் சினிமாத்துறை ஆரம்பமானது.

இதேவேளை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்ட தரங்கனி சினிமா மண்டபத்தை அப்போதைய ஊடகத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.பெரேராவில் 1972ம் இன்று போன்ற நாளிலேயே ஆரம்பித்து வைத்தார்.

இந்த அனைத்து நிகழ்வுகளையும் குறிப்பிடும் வகையில் நிகழ்வொன்று இன்று மாலை 3.30க்கு கொழும்பு 7யிலுள்ளள அமைந்துள்ள இலங்கை தேசிய கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே , கலைஞர்கள் உள்ளிட்ட  பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

a3792001e78e0adee99896f49d22878a_XL

Related posts: