இலங்கை தூதரகத்திற்கு இத்தாலியில் பாதுகாப்பு!

Saturday, February 4th, 2017

இத்தாலிக்கான இலங்கை தூதகரம், அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் அவசரமாக பாதுகாப்பு கோரியுள்ளது. இந்த தகவலை இத்தாலிக்கான இலங்கை தூதுவர் தயா பெல்பொல தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தவர்களினால் இன்றைய தினம் இத்தாலிக்கான இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இவ்வாறு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் கிடைத்தவுடன் தாம் இத்தாலி வெளிவிவகார அமைச்சு மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய அவசியமான பாதுகாப்பை வழங்குவதாக இத்தாலி வெளிவிவகார அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூதரகத்திற்கு முன்னால் கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு எந்தத் தரப்பினராலும் எவ்வித அனுமதியும் கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

foreign-ministry-sri-lanka_1-720x480

Related posts: