இலங்கை கிரிக்கெட் சபைக்கு 128 மில்லியன் டொலர்!

Monday, June 26th, 2017

ஐ.சி.சி வருமான பகிர்வில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு 128 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது. ஐ.சி.சி சம்மேளனம் நடத்தும் கிரிக்கெட் தொடர்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானங்கள் அனைத்து நாட்டு கிரிக்கெட் சபைகளுக்கும் பிரித்து கொடுக்கப்படும்.

அதன்படி, இலங்கைக்கு 128 மில்லியன் டொலர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல் இந்தியாவுக்கு 405 மில்லியன் டொலர்களும், இங்கிலாந்துக்கு 139 மில்லியன் டொலர்களும் கொடுக்க ஐசிசி சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, வங்கதேச அணிகளுக்கும் தலா 128 மில்லியன் டொலர்கள் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜிம்பாப்வே அணிக்கு 94 மில்லியன் டொலர்கள் வழங்கவும் ஐசிசி ஒப்பு கொண்டுள்ளது. இலண்டனில் நடந்த ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: