இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறி – அர்ஜுன
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/arjuna-720x480.jpg)
இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகம் மிக மோசமாக உள்ள நிலையில் உள்ளதால் கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஃபேஸ்புக் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை கிரிக்கெட்டானது தவறானவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபை கவனம் செலுத்துவது அவசியமாகும்.
சூதாட்டக்காரர்களின் கைகளிலேயே இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் இலங்கையின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், தவறானவர்களால் இலங்கை அணி நிர்வகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதிலுள்ள ஆர்வமும் தனக்கு குறைந்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.
Related posts:
|
|