இலங்கை கிரிக்கட் சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம்!

Monday, February 13th, 2017

கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை கடந்த 2016இல் 400 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கப் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினார். சங்கத்தின் தலைவர் என்.பி.ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சங்கத்தின் செயலாளர் வீ.பிரதீபன் பாபு உட்பட கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை நிருவாகிகள் மாவட்ட கிரிக்கட் சபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய அவர் கிழக்கு மாகாணத்திற்கான கிரிக்கட் பயிற்சி நிலையம் மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென 20 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளேன். கிழக்கு மாகாணத்தில் கிரிக்கட் விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட்ட கட்டுப்பாட்டுச் சபை பயிற்றுவிப்பாளர் சைமன் உட்பட பலர் உரை நிகழ்த்தினர். மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கத்திற்கு கிரிக்கட் உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. திலங்க சுமதிபால பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

unnamed

Related posts:

விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத...
நாளாந்தம் கொரோனா தரவுகளில் முரண்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சகல அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் - மத்திய வங்கியின் முன்னாள...