இலங்கை கடல் அபூர்வம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை கரையில் காணக்கூடிய சந்தர்ப்பம்கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நுரைச்சோலை – இலந்தடி கடற்கரையில் தற்போது டொல்பின்களின் கூட்டத்தினை காணக்கூடியதாக உள்ளது. சுற்றுலா பயணிகள்கடலில் நீண்ட தூரம் செல்லாமல் இவற்றினைப் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதம் வரையான காலத்தில் அதிகளவான டொல்பின்களின் வருகையை பார்வையிடலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது. டொல்பின் நடனங்களை பார்வையிட வேண்டும் என்றால் இலந்தடி பிரதேசத்திற்கு வருகைதருமாறுகூறப்படுகின்றது.
பகல் வேளையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காலை வேளையில் டொல்பின் மீன்களை பார்வையிடுவது இலகுவானதாகும்.இலங்கையில் இப்படியான சம்பவங்கள் நடப்பது அபூர்வமான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
தலவாக்கலை - கிறேட்வெஸ்டன் பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை - சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை சமர்ப்பிப்ப...
உலர் இறப்பருக்கான கேள்வி அதிகரிப்பு!
எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில் முன்னெடுப்பு - நீதி அமைச்சர் அலி சப்ரி தகவல்!
|
|