இலங்கை அரச அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சிநெறி!
Sunday, December 31st, 2017இலங்கையின் அரச அதிகாரிகளுக்கு 40 ற்கும் அதிகமான பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
இந்த பயிற்சிகள் 45 நாட்களைக் கொண்டதாகவும் இந்திய அரசாங்கத்தின் முழுமையான நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம்கூறியுள்ளது.
இந்த பயிற்சி நெறிகள் இந்திய வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதில் நிர்வாகம் கிராம மற்றும் நகர அபிவிருத்தியில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியஉயர்ஸ்தானிகர் ஆலய அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பயிற்சியில் 45 வயதிற்கு உட்பட்ட அதிகாரிகள்உள்வாங்கப்படவுள்ளனர்.
Related posts:
தொழில்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
திருட்டில் ஈடுபட்ட சிறுவனுக்கு யாழ். நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!
கொரோனா குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே பில் கேட்ஸ் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!
|
|