இலங்கையைக் கடக்கும் விண்வெளி மையம்!

Thursday, March 23rd, 2017

இலங்கை வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்றைய தினம் அவதானிக்க முடியும் என நாசா அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 7:18:08 மணி முதல் 7:19:35 மணியளவில் இலங்கை வான் பரப்பில் விண்வெளி மையம் கடந்து செல்லும் என நாசா அறிவித்துள்ளது. இந்த நிகழ்வை வெற்றுக் கண்களால் பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பூமியில் இடம்பெறும் அனைத்து விடயங்களும் விண்வெளி ஆய்வு மையத்தின் ஊடாக அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: