இலங்கையில் மூன்று புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஏற்பாடு – பெற்ரோலிய கூட்டுத்தாபனம்!

இலங்கையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு, திருகோணமலை, மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் குறித்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹம்பாந்தோட்டை – சப்புகஸ்கந்தை மற்றும் கொழும்பில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தள்ளார்.
மேலும் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக இரண்டு துறைமுகங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் என்றும் இதற்கு பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாடு தேவைப்படும் என்றும் இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் இந்த திட்டத்திற்கு 100 ஏக்கர்களை முதல் கட்டமாக பயன்படுத்த துறைமுகங்களுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|