இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் தென்கொரியா – தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர்!

Thursday, March 16th, 2017

இலங்கையில் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தென்கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன் பியுங் சே தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது தென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்

இலங்கை மெகா பொலிஸ் திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு தென்கொரியா தயாராக இருப்பதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு இந்த விஜயம் பெரிதும் உதவியதாக தென்கொரிய அமைச்சர் குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றுக்காக சமகால இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்களுக்கு தென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் பவுசர்கள் உள்ளிட்ட ஏனையவற்றை வழங்குவதற்கு தென்கொரிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts: