இலங்கையில் பிரான்ஸ் அபிவிருத்தி அலுவலகம் !

இலங்கையில் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான இராஜதந்திர வசதிகளை செய்துகொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பிரான்ஸ் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக அன்பளிப்பு கொள்கையினை செயற்படுத்தும் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 60 நாடுகளுக்கு தனது சேவையை வழங்கி வருகின்றது.
இந்த நிறுவனம் 2005ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கைக்கும் பிரான்ஸ்க்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Related posts:
பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அ.அட்டைகள் வழங்குவதங்கு ஏற்பாடு!
தொழில் வாய்ப்புகளை வழங்க அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
நாட்டில் இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது - தொற்றுந...
|
|