இலங்கையில் தொழிற்சாலையை அமைக்கும் வோக்ஸ்வொகன் நிறுவனம்!
Monday, November 28th, 2016
வோக்ஸ்வொகன் வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை நடவடிக்கைகளை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் குளியாப்பிட்டியவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வோக்ஸ்வொகன் தொழிற்சாலை எப்போது இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என பலர் வினவியுள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதத்தில் மேலும் பல தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நாட்டின் பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தை வலுவடைய செய்வதற்கு அடிக்கல் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
கட்சிகள் இரண்டு இணைந்தமையின் மூலம் நிலையான அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதில் நன்மையை பெற்று நாட்டில் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|