இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிக்க முடியாது – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021

சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிப்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமானநிலையத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்தவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது இரண்டாவது மூன்றாவது அலைகள் சுற்றுலாப்பயணிகள் காரணமாகவே உருவாகின என அதிகாரிகளே அல்லது அரசாங்கமோ தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகநாடுகள் சுற்றுலாப்பயணிகளிற்கு கதவுகளை மீண்டும் திறந்துள்ள நிலையில் இலங்கை தொடர்ந்தும் மூடிவைத்திருந்தால் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகள் இலங்கை வந்ததும் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனையின் போது பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்படும் சுற்றுலாப்பயணிகள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் நாட்டை சுற்றிப்பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: