இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது – ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

Wednesday, May 19th, 2021

இலங்கையில் கொரோனா தொற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 720ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 145 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 25 ஆயிரத்து 560 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 34 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவே, நாட்டில் பதிவான ஒரேநாளில் அதிகபட்டச உயிரிழப்பாகும்.

இவர்களுள் 18 ஆண்களும் 16 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: