இலங்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !

Monday, August 24th, 2020

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட இருவரும் மலேசியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்தும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2805 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த நோயாளிகளில் தற்போது 134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 65 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: