இலங்கையில் உலகின் மிக உயரமான நத்தார் மரம்!

Thursday, August 18th, 2016

உலகில் அதியுயர்ந்த நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வு அர்ஜுன ரணதுங்க சமூக நலன் அமைப்பினால் இன்று (18) காலை காலிமுகதிடலில் இடம்பெற்றது.

அர்ஜுன ரணதுங்க சமூக நலன் அமைப்பினால்  ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்நிகழ்வு அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது. தற்சமயம் மெக்ஸிகோ நாட்டிலேயே உலகிலுள்ள மிக உயர்ந்த நத்தார் மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் உயரம் 295 அடிகளாகும். இவ்வுலகச் சாதனையினை முறியடித்து உலகிலுள்ள அதியுயர்ந்த நத்தார் மரத்தை காலிமுக திடலில் நிர்மாணிப்பதே அர்ஜுன ரணதுங்க சமூக நலன் அமைப்பின் பிரதான நோக்கமாகும்.

இந்நிர்மாணப் பணிகளின் பொருட்டு  முதல் மண் வெட்டும் நிகழ்வு இன்று காலை 10.07 சுபவேளையிற்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கரங்களினால் முன்னெடுக்கப்பட்டது.  காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகிலுள்ள மிக உயர்ந்த நத்தார் மரத்தின் பொருட்டு பிரதான அனுசரணையாளர், இலங்கை துறைமுக அதிகார சபையின் பௌத்த சங்கமாகும்.

சமாதானம் மற்றும் சகவாழ்வினை பாதுகாத்தல் எனும் நோக்கில் அமைக்கப்படவுள்ள மிக உயரமான நத்தார் மரம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ம் திகதி திறந்துவைக்கப்படுமென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமூக நலன் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் சமாதானம் மற்றும் சகவாழ்வினை பாதுகாக்கும் தேசத்தினை கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்நாட்டில் பௌத்த மதத்திற்கு உயரிய இடம் வழங்கப்படும் என்பதோடு, ஏனைய மதங்களிற்குரிய இடங்கள் பறிக்கப்படமாட்டாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் குறிப்பிட்டதாவது ஒரு சில அரசியல்வாதிகள் குறுகிய நோக்கத்திற்காக சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்கள்.  ‘அடுத்த தலைமுறைக்கு இந்நாட்டினை கையளிக்கும் பொழுது இனங்களிற்கிடையேயுள்ள பிரச்சினைகள் தீர்கப்பட்டிருக்க வேண்டும். சமய பிரச்சினைகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இன்று எங்கள் நாட்டிலுள்ள மஹாநாயக்க தேரோக்கள் இந்து குருக்கள் குருவானவர்கள் மற்றும் மௌலவிகள் ஒன்றிணைந்து தங்களுடைய மதங்கள் தொடர்பாக கலந்துரையாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறனதொரு சமய தலைவர் இந்நாட்டில் வாழ்கையில் அரசியல் தலைவர்கள் இதனைக் காட்டிலும் மிக அறிவுப்பூர்வமாக செயற்பட வேண்டும்.  சமயம் இனத்தை விற்று தங்களுடைய நலன்களை பேணுவதற்கு பாரளுமன்றிலுள்ள ஒரு சில உறுப்பினர்களிற்கு நான் கூறவிரும்புவது யாதெனில் இந்நாடுடன் விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும். இன்று எங்களுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வெற்றிகரமான பயணமொன்றை  மேற்கொள்வதற்கு சந்தர்பம்கிட்டியுள்ளதென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்..

Related posts: