இலங்கையில் இருந்து சென்ற 6 பயணிகள் வங்கத்தில் கைது!

Sunday, October 2nd, 2016

இலங்கையில் இருந்து விமானம் மூலம் பங்களாதேஷ் சென்ற 6 பயணிகள் 370 கிலோகிராம் அழகு சாதன பொருட்களை கொண்டு சென்றமை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகளாவர்.தாம் எடுத்து வந்த பொருட்களை அவர்கள் சுங்கப்பிரிவில் வெளிப்படுத்தாமை காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் குறித்த பொருட்களை எடுத்து வருவதற்கான உரிய இறக்குமதி சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை என்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

arrest_07

Related posts: