இலங்கையில் அறிமுகமாகும் நவீன புகையிரதம்!

Thursday, September 22nd, 2016

இந்தோனேஷியாவில் தயாரிக்கப்படும் நவீன புகையிரதம் ஒன்றை இலங்கைக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார டீசல் ரயில் ஒன்றை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

INKA எனப்படும் இந்தோனேஷியா ரயில்வே தொழில் நிறுவனம் ஒன்றிடமிருந்து புதிய வகை ரயில் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதன் பெறுமதி 70 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.ஆசிய நாடுகளின் பலவற்றுக்கு இந்த வகையில் ரயில்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமே தற்போது இலங்கையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து வட ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் இந்த ரயில்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் மியன்மார் மற்றும் இலங்கை சந்தைகளில் தங்கள் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக INKA நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

Related posts: