இலங்கையின் முன்னாள் ஒலிபரப்பாளருக்கு பாகிஸ்தானில் கௌரவம்!

பாகிஸ்தான் அரசாங்கம் , இலங்கை ஒலிபரப்பாளர் ஒருவரை விருது வழங்கி கௌரவித்துள்ளது.
பாகிஸ்தானின் சிவில் விருதான சித்தாரா இம்தியாஸ் விருதை இலங்கையின் முன்னாள் ஒலிப்பப்பாளர் மற்றும் காஸ்மீர் கற்கை அமைப்பின் ஊடக ஆலோசகரும் தலைவருமான மொஹமட் ஜமாலுதீனுக்கே இவ் உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஜனாதிபதி மம்மூன் ஹூசைன் இந்த விருதை பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வை முன்னிட்டு வழங்கியுள்ளார். காஸ்மீர் மக்களின் விடுதலைக்காக பாடுபட்டமைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சித்தாரா இம்தியாஸ் விருது பாகிஸ்தான் மூன்றாவது அதியுயர் விருதாகும்.
ஜமாலுதீன் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளராக பதவி வகித்தார். இதேவேளை ஓய்வின் பின்னர் காஸ்மீர் கற்கை மையத்தை அமைத்த அவர், காஸ்மீர் மக்கள் தொடர்பில் இலங்கையர்களுக்கு புரியவைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|