இலங்கையின் மின்சாரத்துறையை தனியார் மயமாக்க முயற்சி! தொழிற்சங்கங்கள் குற்றம்!!
Friday, March 25th, 2016நாட்டின் மின்சாரத்துறையை தனியார் மயப்படுத்தவதற்கு இரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சாரசபையின் வர்த்தக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இருக்கும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக இலங்கை மின்சாரசபை போன்ற தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக மின்சார பொதுச்சேவை சங்கத்தின் தலைவர் மாலக்க விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
மின்சார சபையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தொழிற்சங்களுக்கு தெரிவித்துள்ளார். கடனைப் பெறுவதற்காக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் நிர்வாகம் அகற்றப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரசபை ஊழியர்களை புறக்கணித்து, வீடுகளுக்கு மின்விநியோகத்தை வழங்குவதற்கான பாரிய மின்சக்தி திட்ட நிர்மாண செயற்பாடுகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாக மாலக்க விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை மின்சாரசபை மற்றும் அதன் செயற்பாடுகளை தனியார் மயமாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
23 உள்ளுராட்சி சபைகளினது பதவிகாலம் நிறைவடைகின்றது!
இணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தொண்டர் ஆசிரியர்களுக்கு அவசர கலந்துரையாடல்!
|
|