இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப்?

புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பை நியமிக்குமாறு அரசியல் அமைப்பு பேரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றிரவு அரசியல் அமைப்புச் சபை கூடி, பிரதம நீதியரசர் நியமனம் குறித்து ஆராய்ந்துள்ளது.
அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்காக பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ. சித்ரசிறி ஆகிய நீதியரசர்களின் பெயர்களை ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.
அரசியல் அமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பெயர்களில், பிரியசாத் டெப்பை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியல் அமைப்பு பேரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பிரதம நீதியரசர் கே.சிறிபவன் இன்றுடன் ஓய்வு பெற்றுக்கொள்கின்றார்.
Related posts:
சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர் கைது
யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை!
விரைவில் 5G தொழில்நுட்பம் அறிமுகம் - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்!
|
|