இலங்கையின் நடவடிக்கை துணிச்சலானது-மனித உரிமை கண்காணிப்பகம்!

Friday, January 13th, 2017

இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக நேர்மறையான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அ தெரிவித்துள்ளது.

இது இலங்கை எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கை என மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 2017ம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள 90 நாடுகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்களை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை தொடர்ந்தும் தக்க வைப்பது தொடர்பாக இலங்கை, ஐ.நா மனித உரிமை பேரவையில் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கடந்துள்ள காலத்தில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் சில சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடத்தல் மற்றும் தாக்குதல்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்பன அவற்றில் அடங்கும்.போர் குற்றங்கள் குறித்து இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் சட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

TAMILMISSION.COM-14

Related posts: