இலங்கையின் சுதந்திர தினத்திற்கான சர்வமத வழிபாட்டு நிகழ்வுகள்!

Saturday, February 3rd, 2018

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளும் முழு இரவு பிரித் பாராயணநிகழ்வுகளும்  நாளை ஆரம்பமாகின்றன.

கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இந்து மத வழிபாட்டு நிகழ்வும் கொழும்பு அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் விசேட தொழுகையும் கிறிஸ்தவ மத வழிபாட்டுநிகழ்வுகள் கொழும்பு டாம் வீதியில் அமைந்துள்ள மெதடிஸ் தேவாலயத்திலும் கத்தோலிக்க சமய ஆராதனைகள் கொழும்பு-10இ பற்றிமா தேவாலயத்திலும்இடம்பெறவிருக்கின்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் சுதந்திரதின நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரித்தானிய அரசகுடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வேர்ட்டும் அவரது பாரியாரும் இதில் கலந்துகொள்கின்றார்கள். மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலபிரமுகர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

 

Related posts: