இலங்கையின் சட்டமா அதிபராகும் தமிழர்!

பதில் மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
அதற்கமைய, பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரட்ணத்தை சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவைக்கு ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் தீர்மானத்துடன் இசைந்து செல்ல முடிவு செய்துள்ளது.
அவர், இலங்கை சோசலிஷ குடியரசாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையின் சட்டமா அதிபராக பதவி ஏற்கவுள்ள 3ஆவது தமிழரும், 4வது சிறுபான்மையினருமாவார்.
Related posts:
வீடு புகுந்து சிறுமியை கடத்த முயற்சி: அசமந்தமாக இருக்கும் பொலிஸார் - மக்கள் குற்றச்சாட்டு!
ஊரடங்கு நேரத்தில் கைதானோர் எண்ணிக்கை 15,273ஆக உயர்வு - பொலிஸ் ஊடகப் பிரிவு!
பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கை வெளியிடுகின்றது யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்...
|
|