இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பம் கோரல்!

Saturday, December 3rd, 2016

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் முகாமைத்துவ கற்கைகள் பட்டமாணி பாடநெறிக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரி விண்ணப்ப முடிவு திகதியன்று பதினெட்டு வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அல்லது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் தொழிலுரிமைத்துவமும் சிறிய வியாபார முகாமைத்துவமும் சான்றிதழ் கற்கை நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அல்லது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ டிப்ளோமா சான்றிதழ் கற்கை நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். மேற்படி கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் 28.11.2016 தொடக்கம் 30.12.2016வரை www.ou.ac.lk என்னும் இணையதளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியுமென யாழ்.பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

o2usl

Related posts: