இலங்கைக்  கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில்  கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Saturday, June 18th, 2016

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில் கடந்த புதன்கிழமை காரைநகர் கோவளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மூன்று இந்திய மீனவர்கள் உட்படப்  11 இந்திய மீனவர்களை எதிர்வரும்-30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம். றியால் நேற்று-17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த-2 ஆம் திகதி ஒரு விசைப் படகுடன் இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்த நான்கு புதுக் கோட்டை மீனவர்களும், கடந்த -5 ஆம் திகதி ஒரு விசைப் படகுடன் நுழைந்து நெடுந்தீவுக்கு வடக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைதான இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களினதும் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts: