இலங்கைக்கு 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கும் – சீனத் தூதரகம் அறிவிப்பு!

Tuesday, June 29th, 2021

2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக  இலங்கையிலுள்ள சீனத் தூதரகம்  வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை 2ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பப்படும் எனக் கூறியுள்ளது.

இதேவேளை இலங்கையில் மொடேர்னா தடுப்பூசியை அவசரத் தேவைக்காகப் பயன்படுத்த தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: