இலங்கைக்கு வருகைத்தந்த 78 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா !

இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 78 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 28 முதல் ஏப்ரல் 14 வரையான காலப்பகுதியில் 11 ஆயிரத்து 961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.
அவர்களில் 78 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர்களுடன் உள்ளூர் மக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது சுற்றுலாப் பயணிகளிடையே தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அதிகாரிகள் ஏதேனும் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தினால் அந்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்த சுற்றுலா அதிகாரிகள் தயாராக இருப்பார்கள் என்றும் ரனதுங்க கூறினார்.
இதற்கிடையில், நாட்டிற்கு திரும்பிய அதிகமான இலங்கையர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு திரும்புபவர்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நாடு திரும்புபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|