இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்!

அமெரிக்காவினால் இன்று மேலும் ஒரு லட்சம் பைஸர் – பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்போது “கொவிட் தொற்று தொடர்வதுடன் புதிய திரிபுகள் தோன்றும்போது, முடிந்தவரை விரைவாக, பலருக்கு தடுப்பூசி செலுத்த நாம் ஒன்றாக பணியாற்றுவது மிகவும் முக்கியமானது” என்று அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 16 ஆம்திகதி அமெரிக்காவினால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தன.
இதேவேளை, கொவிட் தொற்று பரவலின் ஆரம்பம்முதல், அமெரிக்கா இலங்கை சுகாதார அமைச்சுக்கு, 200 வென்டிலேட்டர்கள் உட்பட 15 மில்லியன் டொலருக்கும் அதிகமான அவசர மருத்துவ உதவிப் பொருட்கள் மற்றும் முக்கியமான சேவைகளை வழங்கி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|