இலங்கைக்கு எந்த தேவை இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய இந்தியா தயாராக இருக்கும் – இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜன் தெரிவிப்பு!

இலங்கைக்கு இப்போது எந்த தேவை இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய இந்தியா தயாராக இருக்கும் என்று யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் உதவிப்பொருட்களை நேற்று முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –
இலங்கை நிதி அமைச்சர் இந்தியா சென்றிருந்தார். அவரை சந்தித்து விட்டு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்ததை நான் சொல்கிறேன்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகளில் அண்டை நாட்டிற்கு ஒதுக்கப்படும் முக்கியத்துவம் குறிப்பாக இலங்கைக்கு இருக்கும் பிரதான இடத்தினை சுட்டிக்காட்டினார்.
இந்தியா இலங்கை தமிழர்களை மறக்கவில்லை, அதன் அக்கறை என்றும் உங்களிடம் இருக்கும் அதனை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றன என யாழ்ப்பாணம் வந்த இந்திய தூதுவர் தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டது போல் இது ஒரு ஆரம்ப கட்ட முயற்சி, வட மாகாணத்திற்கும் குறிப்பாக கடற்தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் வகையிலான அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
கூடிய சீக்கிரத்தில் நிறைவேற்றுவதாக இருக்கின்றோம், அதற்கு கடற்தொழில் அமைச்சர் ஒத்துழைப்பு தருவார் என்று கூறியுள்ளார் .
மேலும், உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ஒரு ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆடை நழுவி செல்லும் சந்தர்ப்பத்தில் ஒரு கை எப்படி வந்து உதவி செய்கின்றதோ அது போல் தக்க தருணத்தில் உதவி செய்வது தான் நட்பு, இந்தியா இலங்கைக்கு என்றென்றும் உதவி செய்ய தயாராக இருக்கின்றது என்ற வெளியுறவுத்துறை அமைச்சரின் வார்த்தைகளை சொல்லி நிற்கிறேன் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|