இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைவர் வாழ்த்து!

Friday, September 11th, 2020

இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எயிட்ஸ் தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள டெட்ரோஸ் அதானோம், இந்த வெற்றிகள் அறிவியல் மற்றும் ஒற்றுமையுடன் நோய்களைத் தடுக்கலாம் மற்றும் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதற்கான சான்றுகள் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

யாழ். நாவாந்துறைப்  பகுதியில் ஊடகவியலாளரொருவரின்  வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகள் திருட்டு 
சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது - வெளிவிவகார அமைச்சர் ...
இரு கப்பல்களில் இருந்து நிலக்கரி, டீசல், விமான எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசே...