இலங்கைக்கு ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் நேபாளப் பெண்கள்!

download (2) copy Wednesday, August 31st, 2016

நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு பெண்கள் ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் நிலைமை தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  பல்வேறு காரணங்களுக்காக நேபாளத்தில் இருந்து அதிக அளவான பெண்கள், இலங்கை, பங்ளாதேஸ் மற்றும் ஓமன் போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர்.

இதன் பின்னணியில் பாரிய குழு ஒன்று செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நேபாள காவற்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இந்த ஆட்கடத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.  அண்மையில் இவ்வாறு கடத்தப்பட்ட 19 நேபாளப் பெண்கள் இலங்கையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.