இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தலையிடுவதற்கு புதிய அரசியல் அமைப்பின் களம் கொடுக்கும்!

மாகாண சபையொன்றின் செயற்பாடுகளால் நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்பட்சத்தில், அதில் தலையிடுவதற்கு புதிய அரசியல் அமைப்பின் மூலம் வாய்ப்பு உருவாவதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஏகீய என்ற சிங்கள பதத்தை ஆங்கில பதிப்பிலும் இடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அதிகாரப் பகிர்வினால் பிரிவினைவாதத்திற்கு சாதகமான நிலை தோன்றும் என தெற்கில் கருதுகின்றனர்
எனவே தற்போதைய அரசியல் அமைப்பில் இல்லாத ஒரு காரணியை புதிய அரசியல் அமைப்பிற்குள் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணசபையின் செயற்பாடுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்பட்சத்தில் அதில் தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக ஜயம்பதி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|