இறால் பிடிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Saturday, March 11th, 2017

கிளிநொச்சி சுண்டிக்குளம் கடல் பகுதியில் இளைஞரின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்ணகிநகரை சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் காலை இறால் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை என தெரிவித்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது, இதன்போதே குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடி தகவல் வழங்கப்பட்டது.

குறித்த சடலத்தினை கிளிநொச்சி நீதவான் பார்வையிட்டதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: