இறக்குமதி செய்யும் பொருள்களை வரையறுக்க நடவடிக்கை!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியத் தேவையற்ற பொருள்களை வரையறுப்பதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்பட முடியுமான பொருள்களின் பட்டியல் ஒன்று அடுத்த இரு வாரத்துக்குள் வெளியிடப்படவுள்ளதாக தேசிய பொருளாதார சபையினால் நிதி அமைச்சுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்களுக்கு இறக்குமதி வரையறை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டுப் பணம் தேவையற்ற விதத்தில் வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!
மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு!
பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு!
|
|