இருவர் குருநகர் மீனவர்களை காணவில்லை!
Saturday, November 26th, 2016
குருநகர் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரு குடும்பஸ்தர்கள் இரு நாட்களாகியும் திரும்பாத நிலையில் அப்பகுதி மீனவர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி சிறியரக உள்ளுர் நோயாளர் படகில் குருநகரில் இருந்து புறப்பட்ட மீனவர்களை நெடுந்தீவு பிரதேசக் கடற்கரைப்பகுதியில் தொழில் ஈடுபட்டதை அவதானித்ததாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 23அம் திகதி பிற்பகல் 2மணிக்கு சென்ற மீனவர்கள் நேற்று மாலைவரை திரும்பாததையடுத்து கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் ஊடாக கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்ட போதும் நேற்றிரவு எத்தகவலும் கிடைக்கவில்லை. இதன்போது குருநகர்ப் பகுதியில் யோன் அன்ரனி, யூட்மைக்கல் ஆகிய மீனவர்கயே இவ்வாறு காணமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சைட்டம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு!
தையல்கடை மீது விசமிகளின் தாக்குதல்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
|
|