இராணுவத்தில் இருந்து   தப்பிச் சென்றவர்கள் சரணடைய இன்றுவரை வாய்ப்பு!

Saturday, December 31st, 2016

இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற இராணுவ வீரர்கள் சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும்  பொது மன்னிப்புக் காலம் இன்று  நிறைவடைகின்றது.

இதேவேளை இந்த பொது மன்னிப்புக் காலத்தில் சரணடையாத வீரர்களை கைதுசெய்ய நாடளாவிய    ரீதியில்     நடவடிக்கை  எடுக்கப்படும்  என   இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்   செனவிரத்ன  தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 1ஆம் திகதி முதல் நாளைவரை  31 இராணுவ அதிகாரிகளும் 7416  இராணுவ   சிப்பாய்களும்  சரணடைந்துள்ளனர்.

Sl-Army

Related posts: