இராணுவத்தின் பொதுமன்னிப்பு கால அறிவிப்பு: 5412 பேர்  முன்வருகை!

Thursday, November 9th, 2017

இராணுவத்திலிருந்து சென்ற 5412 படைவீரர்கள் இராணுவ பொது மன்னிப்புக்காலத்தை பயன்படுத்தி உத்தியோகபூர்வமாக தமது சேவையிலிருந்து விலக தங்களது படையணி தலைமையகங்களூடாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 6 ஆம் திகதி வரையிலான இரண்டுவார பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி ஆறு இராணுவ அதிகாரிகள், ஆறு கெடெற் அதிகாரிகள் மற்றும் 5400 இராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுள்ளனர்.

எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவடையவுள்ள இலங்கை இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு குறித்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 01ம் திகதி முதல் 31திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தை பயன்படுத்தி 34 இராணுவ அதிகாரிகள் மற்றும் 8843 இராணுவ வீரர்களுட்பட சுமார் 8877 இராணுவத்தினர் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக்கொள்ளவதற்கு முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: