இராணுவத்தினர் 556 பேர் கைது!

Wednesday, November 29th, 2017

இராணுவத்திலிருந்து விடுமுறையில் சென்று சேவைக்கு திரும்பாது தலைமறைவாக இருந்து வந்த 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

விடுமுறையில் சென்று நீண்ட காலமாக சேவைக்கு திரும்பாத மற்றும் சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாது தலைமறைவாக இருக்கும் இராணுவத்தினருக்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இம் மாதம் 23 ஆம் திகதி வரை ஒரு மாத காலம் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி இந்தக் காலப்பகுதியில் 11,232 பேர் சரணடைந்து சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகியுள்ளனர். எனினும் மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் தலைமறைவாக இருந்து வருவதாகவும் அவர்களை கைது செய்ய தொடர்ந்தும் தேடுதல் நடத்தப்படுவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: