இரண்டு மாதங்களில் 217 பேருக்கா……?

வடமேல் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் 115 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 102 பேருக்கும் எச்.ஐ.வி தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளதாக வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை பெற்றுச் சென்று மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கே எச்.ஐ.வி தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக வடமேல் மாகாணம் எச்.ஐ.வி தொற்றில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தொற்று நோய்ப் பிரிவு கூறியுள்ளது. மேலும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களுக்கு மருத்துவ வசதிகளும் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மகன் எங்கோ அதற்குத்தான் எனது ஆதரவு - முரளியின் தந்தை!
விதிமுறைகளை மீறிய சாரதிக்குத் அபராதம்!
யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு - சமூக ஆர்வலர்கள் கவலை !
|
|