இரண்டு மணி நேரத்திற்கு ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த தீவில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

தற்போது இந்த நிகழ்வு சுமார் 4 மணித்தியாலங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த நான்கு மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எங்கோ இரண்டு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: