இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வது எப்படி?
Monday, November 7th, 2016
குடியுரிமை சட்டம் 1948ன் 18வது பிரிவில் கிழ் இலங்கை குடியுரிமையை இழந்த ஒருவருக்கு அல்லது அண்மையில் இழக்கவுள்ள ஒருவர் மட்டுமே இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதன் 19.2 மற்றும் 19.3 பிரிவின் முறையே வேறு நாட்டின் குடியுரிமையை பெற்று கொண்டவர்களும், பெற இருப்பவர்களும் இலங்கை குடியுரிமைகளை இழந்த ஒருவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப்படிவம் ஆங்கிலத்தில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். ஒரே குடும்பத்தினராக இருப்பினும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனித்தனியாக விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதனுடன் ஒரு புகைப்படத்தை இணைப்பது அவசியமாகும்.
விண்ணப்பப்படிவத்தின் 6 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ள உறுதிமொழி விண்ணப்பதாரரினால் கையெழுத்திடப்பட வேண்டும்.விண்ணப்பதாரரின் பிறப்புச் சான்றிதழின் நகல், திருமணச் சான்றிதழின் நகல், வெளிநாட்டுப் பிரஜாவுரிமை சான்றிதழ் அதில் இணைக்கப்பட வேண்டும்.
இலங்கை கடவுச்சீட்டின் தரவுப்பக்கத்தினதும் உரிய திருத்தங்களிற்கான பக்கங்களின் சான்று படுத்தப்பட்ட நகல் பிரதிகளும் விண்ணப்பத்துடன் அதில் சேர்க்கப்பட வேண்டும்.மேலதிக தகவல்களுக்கு – குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Related posts:
|
|