இயற்கையால் அவதியுறும் இலங்கை!

தெற்கில் வெள்ளத்தின் காரணமாக பெரும் எண்ணிக்கையில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில் வடமாகாணத்தில் வறட்சியினால் மக்கள் அதிளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவபரங்கள் தெரிவிக்கின்றன.
வரட்சியின் காரணமாக வடமாகாணத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 4இலட்சத்து 40ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த மாவட்டங்களை சேர்ந்த இடர்முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 670 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ்மாவட்டத்தில் 1 இலட்சத்து 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வரட்சியினால் பாதிக்கப் பட்டுள்ளதாக நிலையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி முதல் கடந்த 24ம் திகதி வரையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை எமக்கு வழங்கியது. அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.
Related posts:
|
|