இயற்கைப் பசளை  தரத்திற்கான திருத்தச் சட்டம் உருவாக்கல் தொடர்பாக மக்கள் கருத்து!

Sunday, July 23rd, 2017

இயற்கைப் பசளைக்காக புதிய தரத்திற்கான திருத்தச் சட்டமூலத்திற்கு தற்பொழுது பொது மக்களிடமிருந்து இருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான கருத்துக்களை முன்வைப்பதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 15ஆம் திகதியாகும். இந்தத் திருத்தச் சட்ட மூலம் தொடர்பான தகவல்களை  இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அல்லது அதன் இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

நகர திண்மக் கழிவுகளைப் பயன்படுத்தி விவசாயத் துறைக்குத் தேவையான இயற்கைப் பசளையை தயாரிக்கும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் தொழில்நுட்பக் குழுவொன்றின் மூலம் இந்தத் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை உரத்தில் இருக்க வேண்டிய பௌதீக இரசாயனங்கள் முதலான விடயங்கள் இந்தத் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலாதிகமாக இதனைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.உரிய தரத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட சேதனப் பசளையை பாவனையாளர்களுக்கு விநியோகிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Related posts: