இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 160 பேர் விடுவிப்பு!

Sunday, May 10th, 2020

கொரோனா பரவலை அடுத்து இயக்கச்சி 55  படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர்

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து  தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 ஆண்களும், 138 பெண்களும்  இந்த தனிமைப்படுத்தப் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

நிலையில், 18 நாட்களில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில்  இன்று காலையில் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: