இம்முறை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை 10 சதவீதத்தினால் அதிகரிப்பு!

Saturday, April 23rd, 2016

பல்கலைக்கழகத்திற்கு இம்முறை இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை 10 சதவீதத்தினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்வேறுபட்ட பட்டப்படிப்பினை தொடர்வதற்காக  15 பல்கலைக்கழகங்களுக்கும் 18 உயர்கல்வி நிறுவனங்களுக்குமாக இம்முறை 27,603 மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 25,200 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்பட்ட அதேவேளை இம்முறை 27,603 மாணவர்களை உள்ளீர்ப்பதானது 10 சதவீத அதிகரிப்பினை காட்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: