இன்று 20 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை!

Monday, May 13th, 2019

இன்றைய(13) தினம் சுமார் 20 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, குருநாகல், அம்பாறை, மொனராகலை ஆகிய 11 மாவட்டங்களுக்கு அதிகளவு அவதானம் செலுத்தப்படக் கூடியளவு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தவிர, யாழ்ப்பாணம், புத்தளம், மாத்தளை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய 09 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: