இன்று பேரிடர் குறித்து எதிர்வுகூறும் ஆற்றல்களை விருத்தி செய்யும் சர்வதேச மாநாடு!

Friday, November 18th, 2016

இந்து சமுத்திரத்தில் பேரிடர் குறித்து எதிர்வுகூறும் ஆற்றல்களை விருத்தி செய்தல் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகியது.

இந்த மாநாட்டில் இந்து சமுத்திரத்தின் இடர் நிலைமைகளை எதிர்வு கூறும் நடைமுறையை விருத்தி செய்வது தொடர்பாக ஆராயப்படவுள்ளன. இருநாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்து சமுத்திர வலயத்தைச் சேர்ந்த 14நாடுகளில் இருந்து 28 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

கடற்றொழில் சமூகத்திற்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புயல்கள், சூறாவளிகள், சுனாமி முதலான இயற்கை அனர்த்தங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து அவை பற்றி எதிர்வு கூறும் ஆற்றல்களை விருத்தி செய்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும்

 c0547d89877cd9d23a5faa84b7b998a7_XL

Related posts:


சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்டங்கள் செய்வதை நிறுத்துங்கள் - தொழிற்சங்கங்களிடம் அமைச்சர் நாமல் வலியுறுத்து!
2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அம...
சங்கானையில் 14 விற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை - உரிமையாளர்களிற்கு 174,0...