இன்று நள்ளிரவு முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் வேலை நிறுத்தம்!

Thursday, December 1st, 2016

இன்று(01) நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்ட தனியார் பேரூந்துகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று இலங்கை தனியார் பேரூந்து சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் இணைப்பாளர் யூ.கே ரேனுக இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் கூட்டு சம்மேளனம், மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து உரிமையாளர்களின் சங்கம் மற்றும் தென்மாகாண பேருந்து உரிமையாளர்களின் சங்கம் ஆகியன தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் அறிவித்தபடி மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் சகல ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, முதலாம் திகதி முதல் ஒரு வாரகாலத்திற்கு, அரசாங்கம் போக்குவரத்து துறை சார்த்தவர்களின் விடுமுறை ரத்துச் செய்துள்ளதாக சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன குறிப்பிட்டார். மேலும், ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனமும் சேவைப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தொழிற்சங்கமும் இன்று (01) 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Untitled-1 copy

Related posts:

சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க ஆலோசனை - சுகாதார அமைச்சர்...
அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர...
உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!